நடிகர் விஜய், பூஜா ஹெக்டே ,செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபுஉள்ளிட்டவர்களின் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட்.
இப்படத்தில் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது இந்த டிரைலரில் மால் ஒன்றில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மக்களை விஜய் அதிரடியாக மீட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.இதில் விஜய் ‘ரா’ஏஜெண்டாக வீரராகவன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இப்படடிரைலரையும் வழக்கம் போல் நெட்டிசன்கள் அதில் உள்ள குறைகள், சொதப்பல்கள்,என பலரும் கவனிக்காமல் விட்டதை கவனித்து கலாய்த்து வருகிறார்கள்.
இந்நிலையில்,பீஸ்ட் படத்தின் கதை இது தான் என அமெரிக்க திரையரங்கமான கேலக்ஸி தியேட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில்,”பயங்கரவாத அமைப்பின் தலைவரை விடுவிக்கக் கோரி, நகரத்தின் பரபரப்பான கேளிக்கை மால் சர்வதேச பயங்கரவாத அமைப்பால் சிறைபிடிக்கப்படுகிறது. இந்திய அரசு, பயங்கரவாத குழு உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தீவிரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கிய போது, கடத்தப்பட்ட இடத்திற்குள் தனது முன்னாள் சகாவான முன்னாள் ரா ஏஜென்ட் (விஜய்) இருப்பதைக் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரி (செல்வராகவன்) கண்டுபிடித்து, பயங்கரவாதிகளிடமிருந்து பணயக்கைதிகளை மீட்க அவரிடம் உதவி கேட்கிறார்.முன்னாள் ரா ஏஜென்ட் (விஜய்) பயங்கரவாதிகளுக்கு எதிராக கடத்தப்பட்ட இடத்திற்குள் தனது பணியைத் தொடங்குகிறார்.
இச்சூழலில் பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைப்பின் தலைவர் அரசாங்கத்தால் விடுவிக்கப்படுகிறார். ரா ஏஜென்ட் மிகவும் புத்திசாலித்தனமாக திட்டமிட்டு, எவ்வாறு அவர் பயங்கரவாதிகளை கொல்கிறார்”. என குறிப்பிடப்பட்டுள்ளது.