அப்பா விஜயகுமார் நடிக்க மகன் அருண் விஜய் நடித்திருக்கிற படம் ‘சினம்.’.
சிம்புவுடன் மோதுகிற படம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
ஹீரோக்கள் மீது இருக்கும் நம்பிக்கையினால் இரண்டு படங்களுமே வெள்ளி ,சனி ,ஞாயிறு நாட்களில் ஹிட் அடிக்கிற படங்களாகி விட்டன.
சினம் கொள் ,அது மனிதனின் தேவை என சொல்கிற படத்தில் புதுமை என்ன இருக்கிறது.?அருண் விஜய்யின் நடிப்பில் இருந்த சினம் திரைக்கதையில் இல்லையே என்று தினகரன் செய்தியாளர் மீரான் குறைப்பட்டிருக்கிறார்.ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கத்தில் வந்திருக்கிற சினம் படத்தின் முற்பாதி அடுத்து வருகிற காட்சிகளை யூகிக்கும் வகையில் இருப்பது குறை.
ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவியை பலர் கூடி கற்பழித்து நார் நாராக பிய்த்துப்போட்ட கதையில் அருண் விஜய் ,காளி வெங்கட் ,பாலக் லால்வானி ஆகியோர் நினைவில் நிற்கிறார்கள்.
பாலியல் வன்முறைக்கு எதிராக எடுக்கப்பட்ட சினம் கதையில் காவல் துறையில் இருக்கிற கருப்பு ஆடுகளை இனம் காட்டுகிற ஒரு காட்சி வெகு இயல்பாக இருந்தது. சக அதிகாரியின் மனைவி கூட்டு கற்பழிப்பில் இரையாகிப்போய்விட்டாளே என்கிற இரக்கம் சற்றும் இல்லாமல் அவளை கேவலப்படுத்தும் காட்சி மனதில் இருக்கிறது.
ஆனால் மொத்த படமும் மனதில் தங்கவில்லை.!