பிரபல நடிகை அசினை அடுத்து கமல்ஹாசனின் மகள், ஸ்ருதிஹாசனும் ஒரு மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதாகவும், இவர்கள் திருமணம் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாகவும் இணையதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த திருமண வதந்தி குறித்து கோபப்படாமல் அதை ஒரு நகைச்சுவையாக எடுத்து கொண்ட ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டரில், ‘ம் அப்புறம்’ என ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். இது அவரது மெச்சூரிட்டியை காட்டுவதாக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.