நடிகர் பிரபாஸ் தற்போது இயக்குநர் ஓம்ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஆதி புருஷ்’ படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பிரபாசும், நடிகை கிருத்தி சனோனும் காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், நடிகை கிருத்தி சனோன் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மாலித்தீவுகளில் ஆடம்பர ரிசார்ட்டில் வைத்து காதலர் தினத்தன்று இருதரப்பு திருமண நிச்சயதார்த்தமாக நடைபெறவுள்ளதாக இணையதளங்களில் தகவல்கள் வெளியானது.
இது தொடர்பாக பிரபாஸின் நெருங்கிய நட்பு வட்டாரம் கூறுகையில், ” இந்த செய்தி முற்றிலும் பொய். இந்த செய்தியில் உண்மை இல்லை. இது வதந்தி. இவர்கள் இருவரும் ‘ஆதி புரூஷ்’ படத்தில் நடிக்கும் சக நடிகர்கள் மட்டும்தான். பரபரப்பாக பேசப்படும் இந்த கதையில் சிறிதளவும் உண்மை இல்லை. இது யாரோ ஒருவரின் கற்பனை. இவர்கள் பரப்பும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.” என்றனர்.
ஆனால் இது குறித்து நடிகர் பிரபாஸ் இதுவரை அதிகாரபூர்வமாக அறிக்கை ஏதும் வெளியிட வில்லை. கிருத்தி சனோன் மட்டும் தனது இன்ஸ்டாவில் , ஹாலிவுட் ஐகான் ஓப்ரா வின்ஃபிரேயின் “லெட்டிங் கோ” வீடியோவை பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவில் ” மக்கள் அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது ஏற்றுக்கொள்ளாதீர்கள். இதைச் செய்யாததன் மூலம், உங்கள் நேரத்தை வீணடிக்கும் சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக்கொள்கிறீர்கள். அது உங்கள் ஆற்றலையும் செலவழிக்கிறது, என ஓப்ரா கூறுவது இடம் பெற்றுள்ளது