‘லால் சலாம்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்!

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

  இந்தப் படத்தின் கதை, வித்தியாசமான கதை அம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இதில்ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளதாகவும், ஜெயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்..

இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால்சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

தற்போது நாளை நடக்க இருக்கும் இப் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ரஜினி இன்று காலை மும்பைக்கு சென்றுள்ளார் லால் சலாம் படத்தின் ரஜினி கெட்டப் மற்றும் அவரது கேரக்டர் பெயர் நாளை 12 மணியளவில் வெளியாகவுள்ளதாக லைகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது