வாழ்கையில் ஏற்றம், தாழ்வு சகஜம் தான்!-சரத்குமார் சொல்கிறார்.

நான் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறேன்.நல்ல கதை நல்ல கதாபாத்திரங்களை தோ்வு செய்கிறேன்.dsc_1737வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் சகஜமானதுதான். .அது எல்லோருக்கும் ஏற்படும்.சைக்கிளில் இரு பெடல் மாதிரி ஒன்று மேலே வரும்போது மற்றொன்று கீழே இறங்கிதான் ஆகும்.
dsc_1742ஆனால் நான் அந்த சைக்கிளை தொடர்ந்து ஓட்டாமல் திடீர் என்று கீழே இறங்கிவிட்டேன்.அதை இப்போது உணர்கிறேன்.
இப்போது ஜி.வி.பிரகாசும் நானும் இணைந்து அடங்காதே என்ற படத்தில் நண்பர்களாக நடிக்கிறோம்.சண்முகம் முத்துசாமி இயக்குகிறார்.
dsc_1735இதேபோல் கன்னடத்தில் நடிகர் புனித்ராஜ்குமாரும் நானும் இணைந்து ராஜகுமாரா என்றபடத்தில் நடிக்கிறோம்.இந்த படம் முடிந்து விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
dsc_1733இன்னும் இரண்டு படங்களில் நடிக்க கதை கேட்டுவருகிறேன்.இனி தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தப்போகிறேன்.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.