பிரபல நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா, கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தன்குழுவில் நடனம் ஆடிய ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதித் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 ஆம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிப்புக்கு ள்ளாகி உயிரிழந்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ரமலத்தை பிரிந்தார்.இதற்கிடையே தமிழில் வில்லு படத்தை இயக்கியபோது நடிகை நயன்தாராவை காதலித்தார். திருமணம் வரை சென்ற இவர்களது காதல் திடீரென முறிந்து போனது. சில வருடங்கள் கடந்த நிலையில் . முதுகு வலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த பிரபுதேவா, ஹிமானி சிங் என்ற பிசியோதெரபி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்த நிலையில் இருவரும் கொரோனா ஊரடங்கின் மத்தியில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
சமீபத்தில் இருவரும் திருப்பதிக்கு சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டானது. இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் தனது முதல் மனைவியின் மகன்களுடன் அதிக நேரம் செலவிட்டுவருகிறார் பிரபுதேவா. இந்நிலையில் பிரபுதேவாவுக்கும், ஹிமானி சிங்கிற்கும் திருமணம் நடந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஹிமானி சிங் பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இதன் மூலம் பிரபுதேவா மீண்டும் தந்தையாகியிருக்கிறார். பிரபுதேவா வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆண் குழந்தைகளே உள்ள நிலையில் பிரபுதேவாவிற்கு தற்போது முதன் முறையாக பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதனால் குடும்பமே மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளதாம்.