பாலிவுட்டில் முக்கிய நடிகையாக வலம் வரும் நடிகை கஜோல் தமிழில் ‘மின்சாரக்கனவு‘ ‘வேலையில்லா பட்டதாரி’2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கஜோல் நடிப்பில் வெளியாகியுள்ள லஸ்ட் ஸ்டோரி 2 ஆந்தாலஜி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது.மேலும் பி மல்ஹேபா இயக்கிய ‘தி குட் வைஃப்’ வெப் சிரிஸிலும் நடிகை கஜோல் நடித்துள்ளார்.
இந்த வெப் தொடர் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் நடிகை கஜோல்,தனது புகைப்படங்கள் கருத்துக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில்,நடிகை கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் திடீரென நீக்கியுள்ளார். மேலும் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் இருந்து விலகுவதாகவும் அதிரடியாக கூறியுள்ள கஜோல் தனது டிவிட்டர் பக்கத்தில், “என் வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன். சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்…” என பதிவிட்டுள்ளார்
இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும், கஜோலுக்கு, என்ன ஆச்சு? என கேள்வி எழுப்பி வருகின்றனர் மேலும் சிலர், கஜோலுக்கு ஆறதல் கூறும் வகையில், “நீங்கள் வலிமையானவர் இதுபோன்ற தருணங்களில் இருந்து உறுதியாக மீண்டு வருவீர்கள்“ என்று கூறி வந்தனர்
இந்நிலையில், கஜோல் தான் அடுத்து நடிக்கும் ஒரு வெப் சீரிஸ் ப்ரோமோஷனுக்காக தான் இப்படி ஒரு பதிவை போட்டதாக கூறி இருக்கிறார்.
இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்த,பலரும் சே,கடைசியில் நீங்களுமா இப்படி?என அவரை மோசமாக திட்டி பதிவிட்டு வருகின்றனர். #ShameOnKajolHotstar என்ற ஹாஸ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.













