நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது ’கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.கடந்த காலம்,நிகழ்காலம் என இருவேறு காலகட்டங்களில் இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
முப்பரிமாணத்தில் உருவாகி வரும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடபடக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் சூர்யா,வட ஐரோப்பாவில் அமைந்துள்ள தீவுக் கூட்டம் Faroe Island-க்கு தங்களின் மகன் தேவின் பிறந்தநாளை கொண்டாட சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் சென்றுள்ளனர்.
இது குறித்த வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு செய்த ஒரு சில நிமிடங்களே ஆகிய நிலையில் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தான் சூர்யாவின் பிறந்தநாள் வரும் 23ஆம் தேதி என்பதால் அவரது ரசிகர்களுக்கு சுப்ரைஸ் கொடுக்கும் படியாக ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட உள்ளதாம்.