மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி,வடிவேலு நடித்த மாமன்னன் கடந்த மாதம் 29ம் தேதி வெளியாகி ,சாதி அரசியலை பின்னணியாக வைத்து சமூக நீதி பேசிய ‘மாமன்னன்’ தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபிஸில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது
இதனையடுத்து இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் காரை பரிசளித்தார் உதயநிதி.
இயக்குனர் மாரி செல்வராஜை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு வரவழைத்து பாராட்டினார்.
இந்நிலையில், உதயநிதிஸ்டாலின் இயக்குநர் மாரி செல்வராஜ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் குழுவினர் அவரது வீட்டுக்கு நேரில் சந்தித்து ஆளுயர மாலையை அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.