லியோ விஜய் காட்சிகள் நிறைவு! லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு!!
மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ள புதிய படம் லியோ.இப்படத்தின் மூலம் 14 வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் த்ரிஷாமீண்டும் இணைந்துள்ளனர்.
இப்படத்தில் மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், அனுராக் காஷ்யப் என பல முன்னணி நடிகர்,நடிகைகள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த பிப்ரவரியில் காஷ்மீரில் தொடங்கியது. கடும் பனிபொழிவிற்கு இடையே தொடர்ந்து 52 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடந்தது.
இந்நிலையில், தற்போது சில பேட்ச் வேலைகளுக்காக மீண்டும் படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.. அங்கு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் சமபந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்நிலையில் இப் படத்தின் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். இப்படம்வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.