விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரூத் பிரபு நடிப்பில் உருவாகி வரும் ‘குஷி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், அப்படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘ஆராத்யா’வை வெளியிட்டுள்ளனர்
இந்த காதல் பாடலை, மதன் கார்க்கி வரிகளில் சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி பாடியுள்ளனர்.’ நீ என் சூரிய ஒளி.. நீயே என் நிலவொளி.. நீ வானத்தில் நட்சத்திரங்கள்.. இப்போது என்னுடன் வா உனக்கு என் ஆசை…’ என்ற மந்திர வரிகளுடன் பாடல் தொடங்குகிறது. ‘ஹிருதயம்’ ஹே ஷாம் அப்துல்லா வஹாப் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ‘குஷி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, முரளி சர்மா, ஜெயராம் சச்சின் கெடகர், சரண்யா பிரதீப், வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.