
தமிழ்த்திரையுலகில் கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் ,பார்த்திபன், தேவயானி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ’நீ வருவாய் என’.இப்படத்தை ராஜகுமாரன் இயக்கி இருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ராஜகுமாரன் திட்டமிட்டு இருப்பதாகவும், அதில் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் தனது மூத்த மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து இயக்குனர் ராஜகுமாரன் கூறியுள்ளதாவது, .இந்தப்படத்தின் 2 ம் பாகத்துக்கான கதையை இன்றைய காலகட்டத்துக்கேற்ப எழுதி முடித்து விட்டேன்.முதல் பாகத்தில் அஜித்,பார்த்திபன் தேவயானி என இந்த மூன்று கேரக்டர்களுமே ஜீவன்.அதைப்போலவே இரண்டாம் பாகத்திலும் மூன்று கேரக்டர்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் முதல் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த அஜித் போலவே இரண்டாம் பக்கத்தில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் நடித்தால் நன்றாக இருக்கும் என பேட்டி ஒன்றில் எனது கருத்தை தெரிவித்து இருந்தேன் அது பெரும் வைரலாக பரவி விட்டது என்றாலும், இது குறித்து விரைவில் விஜய்யை சந்தித்து பேசுவேன்
அது நல்லபடியாக நடந்தால், எனது மூத்த மகள் இனியா மற்றும் எனது குரு இயக்குனர் விக்ரமன் வாரிசு விஜய் கனிஷ்கா ஆகிய மூன்று பேரையம் இதில் நடிக்க வைக்கும் வாய்ப்பு எனக்கு அமையும். ஆனால் இது குறித்து எதுவும் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்கிறார்.













