ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் கௌரி கான் தயாரிப்பில், ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள திரைப்படம் ஜவான்.இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் செப்டம்பர் 7, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் படு மிரட்டலாக வெளியான ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியான . 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, யூடியூபில் புதிய சாதனையை படைத்தது.
தற்போது ஜவான் படத்தின் நாயகியான நயன்தாராவின் கேரக்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்சன் ஹீரோக்களுக்கு இணையாக துப்பாக்கியை மிகவும் அசால்டாக கையில் ஏந்திய படி குறிபார்த்து நிற்கும் நயன்தாராவின் புகைப்பட போஸ்டர் அவரது அதிரடி கதாபாத்திரத்தை காட்டுவதாக உள்ளது.
அப்போஸ்டரில் புயலுக்கு முன்னே வரும் இடி தான் இவள் என்றும் இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.