தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள புதிய படத்துக்கு கபில் ரிட்டன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.இதில் கதையின் நாயகியாக நிமிஷா, பருத்திவீரன் சரவணன், ரியாஸ்கான் ,வையாபுரி மாஸ்டர் பரத், சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள ஸ்ரீனி சௌந்தரராஜன் கூறுகையில் ,”மகன் இன்ஜினியராக வேண்டும் என்று தந்தையும், டாக்டராக வேண்டும் என்று தாயும், கலெக்டராக வேண்டும் என்று தாத்தாவும் கனவு காண்கிறார்கள்.இ
ந்நிலையில், தி
இதன் பின்னணி குறித்து அவரது மனைவி ஆராய, அவருக்கு திடுக்கிடும் ஒரு விஷயம் தெரிய வருகிறது. இது தான் தான் கதையின் திருப்பு முனையாக அமைகிறது. இவ்வாறான ஒரு சுவாரசியமான கதைக்களத்துடன் சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்லப்படும் கதை தான், ‘கபில் ரிட்டன்ஸ்’ என்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை ஷியாம் ராஜ் கவனிக்க,ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் இசையமைத்து வருகிறார்.இதன் படப்பிடிப்பு சென்னை,திருச்சி, மலைக்கோட்டை, உறையூர், மதுரை, திருமங்கலம், திடியன் மலை போன்ற இடங்களில் நடைபெற்றது.படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில் நிறைவு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.