நலமா…. கர்ஜிக்கும் சூர்யா! ‘கங்குவா’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகி வருகிறது. இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா,கே.எஸ்.ரவிக்குமார், கே.ஜி.எஃப் அவினாஷ், ரவி ராகவேந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர்.
வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்து வருகிறார்.ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் உருவாகி வருகிறது.
இப்படம்,வரும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 2டி மற்றும் 3டி வடிவங்களில் திரைக்கு வர உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01க்கு வெளியாகியுள்ளது.
காடு, மலை தாண்டி வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அனல் காக்கும் ஈட்டியை ஆக்ரோஷத்துடன் எரிந்து ஒருவரை சூர்யா கொல்லும் காட்சியுடன் உடன் கங்குவா கிளிம்ப்ஸ் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்துகிறது.
இறுதியில் நலமா என சூர்யா ஆக்ரோஷமான சிங்கமாய் நலமா என கர்ஜிக்கும் வித்தியாசமான தொனியுடன் முடிகிறது.ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வரும் இந்த பிரமாண்ட கிளிம்ப்ஸ் வீடியோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.