மோதலையும், காதலையும் சொல்ல வரும் ‘கேங்ஸ்டர்’ கதை ‘டைனோசர்ஸ்’!

புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் ‘டைனோசர்ஸ்’. புதுமுகங்கள் நடிப்பில் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள  இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா தேவா, யாமினி சந்தர்,மாறா,ஜானகி சுரேஷ்,அருண்பாலாஜி  மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை கேலக்ஸி பிக்சர்ஸ் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ளார்.ஜோன்ஸ் ஆனந்த்  ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்..இப்படம் குறித்து இயக்குனர் எம்.ஆர்.மாதவன் கூறுகையில், ‘டைனோசர்ஸ்’.என இந்த படத்தின் தலைப்புக்குள்  ‘டை நோ சார்’  என்ற இன்னொரு அர்த்தத்தையும் வைத்து இருக்கிறோம். 

இது ஒரு கேங்ஸ்டர் படமாக இருந்தாலும் வன்முறை வேண்டாம் என சொல்லும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது  வடசென்னை எண்ணூர் பக்கத்தில் உள்ள நாங்களே கற்பனையாய் உருவாகியுள்ள ஒரு ஏரியாவில் நடக்கிற கதை தான் இது. இரண்டு தாதா கும்பல்களுக்கிடையே உருவாகும் போட்டி மோதலாக உருவெடுக்கிறது.

இதில் ஒரு கொலையும் விழுகிறது. இதையடுத்து என்ன நடக்கிறது.என்பது தான் இப்படத்தின் விறுவிறுப்பான இரண்டாம் பாதியாக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் மோதலையும் ,இரண்டாம் பாதியில் ஒரு அழகான காதலையும்  சொல்லியுள்ளோம்.

 இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வடசென்னை பகுதியிலேயே படமாக்கப்பட்டு உள்ளது. இப்படம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படமாகவும் இருக்கும் என்கிறார்.