பாலிவுட்டின் முன்னணி நடிகைகளும் ஒருவரான நடிகை கங்கனா ரனாவத் தற்போது தமிழில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்திருக்கிறது.
இதையடுத்து இப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருர்க்கிறது. மேலும் இந்தியில் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகும் எமர்ஜென்ஸி படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ரிவால்வர் ராணி என்ற படத்தில் நடித்திருந்தார் கங்கனா. அப்போது படத்தின் ஹீரோ வீர்தாஸுடன் முத்தக் காட்சியில் நடித்தபோது கங்கனா வீர் தாஸின் உதட்டை கடித்துவிட்டார் என்றும்; அதனால் ஹீரோவின் உதட்டில் ரத்தம் வந்ததாகவும் பாலிவுட்டில் கடந்த பல வருடங்களாகவே பேசப்பட்டு வருகிறது..
இந்நிலையில் இந்த முத்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கங்கனா விடம் கேள்வி எழுப்பினார். அதற்கு கங்கனா கூறியுள்ளதாவது,, “என்னது கிருத்திக் ரோஷனுக்கு பிறகு பாவப்பட்ட வீர்தாஸை நான் தாக்கினேனா?. இது எப்போது நடந்தது” என குறிப்பிட்டுள்ளார்.