ஹரூன் எழுதி இயக்கியிருக்கிறார்.
நட்டி ,மொட்டை ராஜேந்திரன்,ஷில்பா மஞ்சுநாத் இந்த மூவரும் நாமறிந்தவர்கள். மற்றவர்கள் அவ்வளவாக அறியப்படாதவர்கள் நம்மைப் பொறுத்தவரை.!
இயக்கியவருக்கு ஹாரர் ரொம்பவும் பிடிக்கும் போல.! நட்டி என்கிற நடராஜை வைத்து ‘மன நல சோதனை’ நடத்திவிட்டார் நமக்கு.!
இண்டர்வல் வரை நமக்குள் ஒரு நமைச்சல். “எப்படி முடிச்சுகளை அவிழ்க்கப் போகிறார்.ஹாரர் கடுமையான காரமா இருக்கே ” என்கிற அழுத்தமும் எதிர்பார்ப்பும்!
இடைவேளைக்குப் பிறகு சின்னப்பிள்ளைகளுக்கு பூச்சாண்டி காட்டிய மாதிரி ஆகி விட்டது.
ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிற நான்கு பெண்கள். கேர் ப்ரி குட்டிகள். புட்டிகளுடன் போதை பொருள்களை புகைப்பதும் ,உறிஞ்சுவதுமாக மாலைப் பொழுதுகளில் மயங்கிப்போகிறார்கள். பப்பில் மப்பை ஏற்றிக்கொண்டு காரில் பறந்தவர்கள் நட்டியிடம் மாட்டிக்கொண்டு வாரங்களை கடத்துகிறார்கள். அது என்ன 21 நாள் கணக்கு என்பது ஹரூன் அறிந்த ரகசியம்.!
இவர்கள் எப்படி மீட்கப்படுகிறார்கள்,நட்டி உண்மையிலேயே அராஜகரா ,இல்லையா என்பது முடிவு வரை விரிகிறது.
நான்கு பெண்களும் அந்த அடாசு மாளிகையை விட்டு தப்பிப்பதற்கு போடுகிற திட்டங்களே சுவாரசியப் பகுதி. அபியாக வருகிற ஷில்பா பாராட்டலாம். ஆளும் அம்சம் .
இன்னொரு பெண் ,தடித்த உதடுகள்,பெருத்த தனங்கள் ,கனத்த புட்டம் என பார்வைக்கு ‘பச்சக்’ டைப். எகிப்திய பின்புலம் .சென்னை வாசி.தமிழ் நல்லாவே பேசுகிறார்.
நான்கு பெண்களையும் திருத்துவதற்காக பெற்றோர்கள் உதவியுடன் மனநல டாக்டர் நட்டி போட்ட நாடகமே அடாசு மாளிகையில் நடக்கும் அராஜகங்கள்.
குறைகள் இல்லாமலா ? சொல்லி என்ன பயன்?உடைந்த கண்ணாடி பின்னர் உடையாமல் இருப்பதை எல்லாமா சொல்லமுடியும்.?ஒளிப்பதிவு கிறிஸ்டோபர்.நல்ல சாய்ஸ்.
இசை கார்த்திக் ராஜா. இசைஞானியின் பிள்ளையாஆர்மோனிய பொட்டி வாசித்திருப்பது?
நட்டியும் நான்கு குட்டியும் என்று வைத்திருக்கலாம் என்று சக விமர்சகர் சொன்னார்.நல்லாத்தான்யா சொன்னாரு.!
–தேவிமணி.