நார்வே நாட்டில் அஜித், விஜய்யுடன் திரிஷா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் காஷ்மீரில் தொடங்கிய லியோ படப்பிடிப்பு கடந்த மாதமே நிறைவடைந்தது. இப்படத்தின் படப்பிடிப்பை வெறும் 125 நாட்களில் முடித்துவிட்ட லோகேஷ்கனகராஜ் , தற்போது இதன் போஸ்ட் புரொடக்‌ஷன், ப்ரொமோஷன் வேலைகளில் பிஸியாகியுள்ளார் .

மேலும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை முதலில் சென்னை, திருச்சி, மதுரை அல்லது கோவை என இவற்றில் எதாவது ஒரு நகரில் நடக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், பின்னர் துபாயில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது மலேஷியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே விஜய் லண்டன் சென்றுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும், தபபாய்க்கு சென்ற விஜய் அங்கிருந்து நார்வே சென்றுவிட்டாராம். ஆனாலும் இது குறித்து விஜய் தரப்பு எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்க வில்லை

இதற்கிடையே நடிகர் அஜித்தும் நார்வே சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் நடிகை த்ரிஷாவும் நார்வே நாட்டில் உள்ளதாக தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் ‘லியோ’ படத்தை தொடர்ந்து திரிஷா, அடுத்ததாக அஜித் நடிக்க இருக்கும் ’விடாமுயற்சி’ படத்தில் நடிக்க உள்ளார்.மேலும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ’கமல் 234’ படத்திலும் திரிஷா தான் நாயகி என்பதாகவும் சொல்லப்படுகிறது.