பிரபாஸுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்!

பாகுபலி நடிகர் பிரபாஸ் தற்போது ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ மற்றும் ‘புராஜெக்ட் கே’ போன்ற பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். மெகா பட்ஜெட் படங்களாக உருவாகும் இப்படங்களுக்கு இடையே, இயக்குனர் மாருதி இயக்கத்தில் உருவாகும் நகைச்சுவை படம் ஒன்றில் பிரபாஸ் நடிக்கிறார்.

.’ராஜா டீலக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப் படத்தின் முதல் ஷெட்யூல் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், அடுத்த ஷெட்யூல் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர்

இவர்களில் மாளவிகா மோகனன்,ரித்தி குமார் ஆகியோர் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளனர். தற்போது முதன்மை கதாநாயகியாக நிதி அகர்வால் உறுதி செய்யப்பட்டுள்ளார்இது குறித்த தகவலை அப்படத்தின் இயக்குநரான மாருதி, தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.