விஜய்சேதுபதி வெளியிட்ட “ஹிட்லிஸ்ட்”-ன் டீசர்.
இயக்குனர் .கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே செல்லுலாய்ட்ஸ்-ன் அடுத்த படைப்பு – “ஹிட்லிஸ்ட்” சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல இயக்குனர் விக்ரமன் மகன் விஜய்கனிஷ்கா அறிமுகமாகும் இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் அசோசியேட் இயக்குநர்கள் சூர்யகதிர்காக்கள்ளர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர்.C.சத்யா இசையமைக்கிறார், ராம்சரண் ஒளிப்பதிவு செய்ய, ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பு செய்கிறார். மற்றும் கலை இயக்கம் அருண்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, டீசரை பார்த்துவிட்டு “சிறந்த ஆக்ஷன் படம்” என்று மகிழ்ந்து பாராட்டினார். அறிமுக ஹீரோ திரு.விஜய்கனிஷ்காவை பெரிதும் பாராட்டி, உங்கள் ஹிட் படங்களின் தொடக்கமாக, இந்த “ஹிட்லிஸ்ட்” திரைப்படம் இருக்கும் என்று வாழ்த்தினார்.