மத்திய அரசின் 69ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பு !
இந்திய அரசின் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்த விருது பட்டியலில் 2021ஆம் ஆண்டுக்கு முன்னர் தணிக்கை பெற்ற படங்கள் இடம்பெற்றிருந்தன. மொத்தம் 283 படங்கள் இப்போட்டியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன,
தமிழில் , த .செ .ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன் உள்ளிட்டோர் நடிபில் வெளியான ஜெய் பீம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன், சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான விநோதய சித்தம், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றிருந்தன.
தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர், சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா,மலையாளத்தில், நயாட்டு, மின்னல் முரளி, இந்தியில், 83, சூர்யவன்சி, கங்குபாய் கத்தியவாடி, மாதவன் இயக்கிய ராக்கெட்ரி உள்ளிட்ட படங்களும் சிறந்த படங்களுக்கான தேசிய விருது போட்டியில் பங்கேற்று இருந்தன
இந்நிலையில் இன்று மாலை மத்திய அரசின் 69ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்’ட் சிறந்த படத்துக்கான தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளது.
தெலுங்கில் புஷ்பா படத்தில் நடித்ததற்காக சிறந்த தேசிய நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,2021ம் ஆண்டிற்கான சிறந்த பாடல்கள் பிரிவில்
அல்லு அர்ஜூனின் நடிப்பில் வெளியான புஷ்பா படம் விருதை அள்ளியுள்ளது.சிறந்த பாப்புலர் திரைப்படம் என்ற விருது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்திற்கு கிடைத்துள்ளது.
சிறந்த பின்னணி பாடகி என்ற விருது ’இரவின் நிழல்’ திரைப்படத்தில் மாயவா சாயவா என்ற பாடலை பாடிய ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
தமிழில் சிறந்த படம் என்ற விருது ’கடைசி விவசாயி’ என்ற படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’சார்பாட்டா பரம்பரை’ ’ஜெய்பீம்’ ’கர்ணன்’ ஆகிய திரைப்படங்களுக்கு இதுவரை விருதுகள் அறிவிக்கப்படவில்லை