ஜெயிலர் லால் சலாம் படங்களைத்தொடர்ந்து ரஜினிகாந்த், த செ ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‘தலைவர் 170’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் தற்போது லைகா தயாரிப்பில்,உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
. இந்த படத்திற்காக லொக்கேஷன் பார்க்கும் பணி முடிவடைந்து விட்டதாகவும் முதல்கட்ட படப்பிடிப்பு அடுத்தமாதம் முதல் வாரத்தில் திருவனந்தபுரம் மற்றும் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
இதில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத்பாசில் ,ரானா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.இதன் முதல் கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் பகத் பாசில் கலந்து கொள்வார் என்கிறார்கள்.
உண்மை சம்பவத்தை தழுவி உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் போலியான என்கவுண்டர்களுக்கு எதிராக போராடும்காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும்கூறப்படுகிறது.
இந்த கதை நடைபெறும் பகுதி கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் என்பதால் அந்த பகுதி மக்கள் பேசும் ஸ்லாங்கை ரஜினிகாந்த் பேச பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.