தமிழ்த்திரையுலகில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்,பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மெட்ராஸ்.
நடிகர் கார்த்தி, கேத்தரீன் தெரசா, கலையரசன் உள்ளிட்டவர்கள் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கியிருந்த இந்தப் படத்தில் வட சென்னை மக்களின் வாழ்வியலை மிக இயல்பாக காட்டியிருந்தார்.
இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.இந்நிலையில் மீண்டும் மெட்ராஸ் படக்குழு புதிய படத்துக்காக இணையவுள்ளதாம்.
அடுத்த ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பே வெளியாகலாம் என தெரிகிறது













