மறைந்த ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் சூர்யா! பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்!!
நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்கத்தைச் சார்ந்த 24 வயதான அரவிந்த் என்ற இளைஞர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார்.
இது குறித்து தனது மன்றத்தினரின் மூலமாக தகவலறிந்த நடிகர் சூர்யா, எண்ணூரில் உள்ள அந்த ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்திவிட்டு, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.