அயலான் ‘டீசர்’ வெளியானது!

‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில்,சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அயலான்’ .   சயின்ஸ் பிரிக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்பிரியா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கோட்பாடி ஜே. ராஜேஷ், ஆர்.டி. ராஜா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் வரும் போனகளுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின்
டீசர் இன்று மாலை வெளியாகியுள்ளது.

டீசரில், ஏலியன் பூமிக்கு வருவது போன்றும் அந்த ஏலியன் சிவகார்த்திகேயன், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரிடம் இருப்பது நட்புடன் பழகி வருவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த ஏலியனை அழிப்பதற்கான நடக்கும் முயற்சியை முறியடித்து, நண்பர்களுடன் சேர்ந்து ஏலியனை சிவகார்த்திகேயன் காப்பாற்றினாரா இல்லை இறுதியில் என்ன ஆனது என்பதே கதை என இப்பட டீசர் மூலம் நமக்கு தெரிகிறது, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோட்பாடி ஜே. ராஜேஷ், ஆர்.டி. ராஜா இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.