தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜய்,அடுத்ததாக அரசியலிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளார். தனது மக்கள் இயக்கத்தை, அரசியல் இயக்கமாகவே நடத்தி வருகிறார். இதையடுத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதுவரை விலையில்லா மருந்தகம், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களான பால், முட்டை, ரொட்டி வழங்குதல், ஏழை குழந்தைகளுக்கான இரவு நேர பயிலகம் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஏழை-எளிய மக்களின் நலனுக்காக இலவச சட்ட மையம் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை சென்னை கொடுங்கையூரில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்,இலவச சட்ட மையத்தை அதன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,”ஏழை-எளிய மக்கள் சட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக அவதி படக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில், இலவச சட்ட ஆலோசனை மையம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் இப்பகுதி மக்கள் மாலை வேளைகளில் சட்ட ஆலோசனைகளை பெறலாம்.இதை தொடர்ந்து சென்னையின் மற்ற பகுதிகளுக்கும், மற்ற மாவட்டங்களுக்கும் இலவச சட்ட ஆலோசனை மையம் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது .இவ்வாறு அவர் கூறினார்.
விஜய் மக்கள் இயக்க இலவச சட்ட ஆலோசனை மையத்தில் நடக்கும் பணிகள் குறித்த வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,”குடும்பத்
சிறுவர்,சிறுமிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு (போக்சோ) எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய சட்ட ஆலோசனை.வங்கி கடன், வீட்டுக்கடன், தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குதல். அதேபோல் காப்பீடு விவகாரங்கள் மற்றும் நுகர்வோர் நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கான சட்ட ஆலோசனைகள், வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்குதல்,நிறுவனங்களின் நடவடிக்கையால் திடீர் பணி நீக்கம், ஓய்வூதிய தொகை கிடைப்பதில் சிக்கல் உள்ளிட்ட தொழிலாளர் நலத்துறை தொடர்பான விவகாரங்களில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேரும் போது அவர்களின் சான்றிதழுக்கு ( முறையாக சரிபார்த்த பிறகு கையெழுத்து வழங்க உதவி செய்வது. சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவியருக்கு வழிகாட்டுதல்.அந்தந்த பகுதிகளில் உள்ள பொது பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காண வழிவகை செய்வது (உதாரணமாக சாலை வசதி, குடிநீர் வசதி கிடைக்க போராடும் மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவது).போன்ற ஆலோசனைகளையும் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.