லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்தில் விஜயுடன் திரிஷா, மன்சூர் அலிகான்,மிஷ்கின், அர்ஜு ன், கவுதம்மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பான் இந்திய திரைப்படமாக இப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.சமீபத்தில் வெளியான இப்பட டிரைலரில், விஜய் பேசியிருந்த வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விஜய்க்கு பெண் ரசிகைகளும், குழந்தை ரசிகர்கள் அதிகம் இருக்கும் போது இது போன்ற வசனத்தை அவர் பேசலமா? என பலரும் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வந்ததால்,, வேறுவழியின்றி படக்குழு ,லியோ படத்தின் டிரைலரில் இருந்து கெட்ட வார்த்தை மியூட் செய்துள்ளது. இதை தொடர்ந்து திரைப்படத்திலும் சம்பந்த பட்ட காட்சியில் குறிப்பிட்ட அந்த வசனம் மியூட் செய்யப்பட உள்ளது என்கிறார்கள்.இப்படத்தில் தணிக்கை குழுவினர் ஏற்கனவே 13 இடங்களில் கத்தரி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப் படத்திற்கு, சிறப்புக் காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ள நிலையில், இன்னொரு சர்ப்ரைஸ்ஸாக லியோ மூன்றாவது பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.