சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தை, ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட படங்களை தயாரித்த கோபுரம் பிலிம்ஸ் ஜி.என்.அன்புசெழியன் தயாரிக்கிறார்
இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
நல்ல கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படைப்பாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஓம் நாராயண் கவனிக்க,டி .இமான் இசையமைத்து வருகிறார்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு முடிவடைந்து முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.