மீண்டும் திருமணத்திற்கு தயாரான அமலாபால்! பிறந்தநாளில் காதலருடன் ‘முத்த’ வீடியோ வெளியிட்டு அதிரடி!!

 நடிகை அமலாபால் 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக   அறிமுகமானார். தொடர்ந்து  2011 ஆம் ஆண்டு வெளியான மைனா திரைப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர்  தெய்வதிருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி?, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கடாவர் என்ற வெப் சீரிஸிலும் அமலா பால் நடித்திருக்கிறார். இந்நிலையில், அமலா பால் இயக்குநர்  ஏ.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் நடிகை அமலா பால் இன்று தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் அமலா பாலின் நெருங்கிய நண்பர் ஜனா தேசாய் என்பவர் அமலாபாலிடம் காதலை சொல்லும் ( லவ் ப்ரபோஸ்)  வீடியோவை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இவ்  வீடியோவில் அமலாபால் முன்பு   சினிமா கதாநாயகர்கள் பாணியில்  நடனம் ஆடி,   ஜனா தேசாய்  தனது  காதலை  மண்டியிட்டு சொல்வதும் அதை ஏற்றுக்கொண்ட அமலாபால் அவரை இறுகத் தழுவிக் கொண்டு பலமுறை ‘லிப்லாக்’  முத்தம் கொடுப்பதும்,,இதையடுத்து ஜனா தேசாய் அவரது விரலில் மோதிரம் மாட்டி விடும் காட்சிகளும் இடம் பெற்று உள்ளது.இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவ் வீடியோ தனது காதலை வெளிப்படையாக அமலாபால் அறிவித்துள்ளார்.  விரைவில் இவர்களது  திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.