நம்பமுடியாத சண்டை காட்சிகளில் ‘டூப்’ போடாமல் நடித்தேன்! கத்ரீனா கைப் சுவாரசிய தகவல்!!
யஷ்ராஜ் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம், ‘டைகர் 3’.இப்படத்தில் சூப்பர் ஏஜென்ட் டைகராக நடித்துள்ள சல்மான் கானுக்கு ஜோடியாக பெண் உளவாளி கதாபாத்திரத்தில் கத்ரீனா நடித்துள்ளார்.
பான் இந்திய படமாக உருவாகியுள்ள இப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவ-12 ஆம் தேதி வெளியாகிறது.இப்படத்துக்காக நம்பமுடியாத சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ள கத்ரினா கைப் இதுவரை வெள்ளித்திரையில் வேறெந்த பெண்ணும் செய்திராத அளவுக்கு ஒத்தைக்கு ஒத்தை மோதும் ஆக்சன் காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பதற்கு தயாராவதற்கு கிட்டத்தட்ட 60 நாட்கள் வரை அவர் கடுமையான பயிற்சியும் ஒத்திகையும் எடுத்துள்ளார்.
இது குறித்து கத்ரீனா கைப் கூறுகையில்,”இதில் சோயா என்ற பெண் உளவாளியாக நடித்துள்ளேன்.சண்டை என வந்துவிட்டால் எந்த அளவுக்கும் இறங்கி ஒரு கை பார்க்கும் அளவுக்கு கடுமையான, புத்திசாலித்தனமான மற்றும் கொடுமையான உளவாளி அவள்.ஒரு ஜானராக ஆக்சனை நான் விரும்புவதுடன் ஒரு உளவாளியாக நடிக்க வேண்டும் என்கிற என் கனவும் நனவாகியுள்ளது.
அதனால் என்னுடைய 200 சதவீத உழைப்பை இந்த டைகர் மூன்றாம் பாகத்திற்கு கொடுத்துள்ளேன். ஆக்சன் காட்சிகளுக்காக குறைந்தது இரண்டு மாதங்களாவது என்னை தயார் படுத்திக் கொண்டேன்.என்னுடைய திரையுலக பயணத்திலேயே மிகவும் கடினமான பயிற்சியாகவும் இருந்தது. இதுபோன்ற காட்சிகளில் இதற்கு முன்னால் எந்த ஒரு நடிகையும் முயற்சித்ததில்லை என்பதையும் நீங்கள் படம் பார்க்கும் போது உணர்வீர்கள்.என்னுடைய பெருமையான அடையாளங்களில் ஒன்றாக இப்படம் இருக்கும் ” என்கிறார்.