விஜய் சேதுபதி மகன் கதாநாயகன் ஆனார்!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, விஜய் சேதுபதியுடன் இணைந்து  சிந்துபாத்  என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது  விடுதலை 2 படத்தில்  சூர்யாவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்,  இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று பூஜையுடன்  தொடங்கியது.ஏ.ஜெ.பிரேவ் மேன் பிக்சர்ஸ் படநிறுவனம் சார்பில் ராஜ லட்சுமி அரசகுமார் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘ பீனிக்ஸ் ‘ (வீழான்) என தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் மூலம் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் ‘ *காக்கா முட்டை’ விக்னேஷ்* ‘, வர்ஷா,அபி நக்ஷத்ரா, சத்யா என்.ஜே, சம்பத், ஹரீஷ் உத்தமன், திலீபன்,, பூவையார்  மற்றும் பலர்  நடிக்கின்றனர்.  இப்படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குனராகவும் அறிமுகம் ஆகிறார். சாம் சி.எஸ்  இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

கதாநாயகன் தேர்வு குறித்து இயக்குனர் அனல் அரசுவிடம் கேட்டபோது, “நாங்கள் ஜவான் படப்பிடிப்பில் இருந்தபோது, விஜய் சேதுபதியின் மகன் தனது தந்தைக்கு மதிய உணவு பரிமாறுவதற்காக செட்டுக்கு வந்திருந்தார். அவர் அதிரடியான சண்டைக் காட்சிக்கான தயாரிப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் என் கதையில் நடிக்க அவர் பொருத்தமானவராக என்பதை உணர்ந்தேன்.இந்த எண்ணத்தை விஜய் சேதுபதியிடம் பகிர்ந்து கொண்டபோது, சூர்யா இந்த கதைக்கு பொருத்தமானவர் என்பதால் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும்
இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அவரை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

இப்படத்தில் நடிப்பது குறித்து சூர்யா பேசும்பொழுது, நீண்ட நாட்களாக சண்டைக் காட்சிகளில் நடிக்க விரும்புவதாகவும், அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது, அதை சரியாகப் பயன்படுத்த விரும்புவதாகவும் கூறினார். மேலும் இந்த படத்திற்காக 6 மாதம் பயிற்சி எடுத்ததாகவும், இந்த படத்தில் நடித்து தந்தையின் ஆதரவு இல்லாமல் தானே தனக்கான பெயரைத் தானே உருவாக்குவேன் என்றும் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தனது தந்தையின் நடை வேறு, அவரது நடை வேறு.என்கிறார்.