நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் ‘சொகுசுக்கார்’ பரிசு !
சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார், இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன்,தனது காதல் மனைவிக்கு, ‘மெர்சிடிஸ் மேபேக்’ கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். அதன் விலை ரூ.2.60 கோடியிலிருந்து ரூ.3.40 கோடி ரூபாய் வரை இருக்கும் என தெரிகிறது. விக்னேஷ் சிவன் தனக்கு கொடுத்த சொகுசு காரின் புகைப்படத்தை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.