வெள்ளத்தில் சிக்கிய நடிகை ஆத்மிகா!

சென்னை வெள்ளத்தில் பல முக்கிய சினிமா நட்சத்திரங்களும் சிக்கிக்கொண்டு இருக்கின்றனர். நடிகர் விஷ்ணு விஷால் வீட்டின் கூரையில் அமர்ந்துகொண்டு உதவி கேட்டு ட்விட் செய்திருந்தார்.அதனை தொடர்ந்து மீட்பு படையினர் வேகமாக சென்று விஷ்ணு விஷால் மற்றும் அவர் வீட்டில் தங்கி இருந்த நடிகர் அமீர் கான் அகியோரை மீட்டனர்.

இந்நிலையில் தமிழில் மீசைய முறுக்கு,நரகாசூரன், காட்டேரி, கண்ணை நம்பாதே திருவின் குரல் என பல  படங்களில் நடித்துள்ள  நடிகை ஆத்மிகா தான் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதாக கூறி உதவி கேட்டிருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்,”நான் இருக்கும் காரப்பாக்கம் ஏரியாவில் தண்ணீர் அளவு குறையவில்லை. மின்சாரம், நெட்ஒர்க், குடிக்க தண்ணீர் எதுவும் இல்லை. இந்த பதிவு சரியான அதிகாரிகளை சென்றடையும் என நம்புகிறேன்.””மாடிக்கு வந்தால் தான் கொஞ்சம் நெட்ஒர்க் கிடைக்கிறது” என பதிவிட்டு இருக்கிறார்.