கற்பனை கண்ணப்பனை கரை ஏத்த கதிரறுப்பு ஆளுங்க இருந்தும் என்னாச்சு என்கிற நெலமைதான் ..
சரி உள்ள போயி பார்க்கலாம்.
‘ஏ. ஜி. எஸ். என்டர்டைன்மென்ட்’ சார்பில் கல்பாத்தி அகோரம், கணேஷ், சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள படம், காஞ்சுரிங் கண்ணப்பன். இதில், சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் , நாசர், ஆனந்தராஜ், புது மாப்ள ரெடின் கிங்ஸ்லி, எல்லி அவ்ரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் டைரக்ட் பண்ணிருக்கார் .
விடிவி கணேஷ், சரண்யா தம்பதியினரின் மகன் சதீஷ். . இஞ்சினியரிங் படிச்சிட்டு வேலை தேடுறார். ஒரு நாள் வீட்டிலுள்ள கிணத்தில தண்ணி இறைக்கும் போது ஒரு வித்தியாசமான பொம்மையுடன் ‘ட்ரீம் கேட்சர்’ கிடைக்கிது. அதிலிருக்கும் ஒரு சிறகை பிய்த்துவிட்டு கிணத் திலேயே போட்டு விடுகிறார்.
அன்னிக்கி ராத்திரி அவருக்கு ஒரு கனவு ! மச்சான் மாட்டிக்கிட்டான்கிற மாதிரி ஒரு பெரிய அரண்மனை பேயிடம், சிக்கிடறார். கனவுதானேன்னு விட முடியல. மீண்டும் அதேமாதிரி கனவு! . அதை நிஜத்திலும் உணரத்தொடங்குகிறார். , (எக்ஸார்சிஸ்ட்) பேய் ஓட்டி நாசரிடம் போகிறார். சதீஷின் மொத்த குடும்பமும் அந்த அரண்மனை பேயிடம் சிக்கிக் கொள்கிறது. அதிலிருந்து அவிய்ங்க மீண்டாய்ங்களா ,சிக்கி சிதையிறாய்ங்களா ? இதான் கதை.!!!
செல்வின் ராஜ் சேவியர் வித்தியாசமாத்தான் யோசிச்சிருக்கார் , கொஞ்சம் மனசில பூ பூக்குது. ஆனால், திரைக்கதை வழுக்கி விடுது.சந்தானத்தின் இடத்துக்கு சதீஷை புரமோட் பண்ணுகிற முயற்சியாத் தெரியிது..
யுவன் இசை ஓகே. ஆனா சவுண்ட் எஃபெக்ட்ஸ் செவிகளில் ஏர் ஓட்டுது .
பேய் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
—தேவிமணி