விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மெர்ரி கிறிஸ்துமஸ், விடுதலை 2, மகாராஜா படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் விஜய் சேதுபதி,அடுத்ததாக .வி கிரியேஷன்ஸ் சார்பில்,கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ட்ரெயின் என்ற படத்தில் நாயகனாக கமிட்டாகியுள்ளார்.
ஒரு இரவில் ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’கில் விஜய்சேதுபதி வித்தியாசமான தாடி, மீசை தோற்றத்தில் காணப்பட்டார்.இப் படம் மிஷ்கினின் 11வது படமாக உருவாகி வருகிறது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார்.
இவர்களுடன் நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிரித்விராஜ், கேஎஸ் ரவிக்குமார், யூகிசேது உள்ளிட்டவர்களும் நடிக்கவுள்ளனர்.இந்நிலையில் இப்படத்துக்காக தனது உடல் எடையை கணிசமாக குறைத்து ,பிட்டான தோற்றத்திற்காக ‘ஜிம்’ மில் அதிக நேரம் செலவழித்து வருகிறாராம்.




