அமெரிக்கா சென்று நெப்போலியனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி அசத்திய குஷ்பு மீனா!
அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறிவிட்ட நடிகர் நெப்போலியன் சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை அமெரிக்காவின் நாஷ்வில்லி டென்னசியில் கொண்டாடினார்.
அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அமெரிக்கா சென்ற குஷ்பூ மற்றும் மீனா இருவரும் நெப்போலியன் பிறந்தநாள் விலாவில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் நெப்போலியன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.