தந்தைக்கு நிகரானவர் கே.பாலசந்தர்! கமல்ஹாசன் நெகிழ்ச்சிப்பதிவு!!
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் 9வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கே பாலசந்தர் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளதாவது, “அசாத்தியமான எண்ணிக்கையில் திரைப்படங்களை இயக்கிய திறமையாளர் என அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் எத்தனையோ நடிப்புக் கலைஞர்களை திரைக்கு தந்த திண்மையாளர் என்றும் பாராட்டியுள்ளார்.
தந்தைக்கு நிகரானவர்: தொடர்ந்து தனக்கென்றிருந்த பாணியிலிருந்து தவறாமல் படைப்புகளை கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் என்றும், அவரது நினைவு நாளான இன்று என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை வகிக்கும் என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.