தமிழ்த்திரையுலகில் தனுஷின் 3 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கிய ஐஸ்வர்யா சினிமா வீரன் என்ற ஆவணப் படத்தை இயக்கினார். தற்போது மூன்றாவது படமாக லால் சலாமை இயக்கியுள்ளார். லைகா தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து மத அரசியலை பேசி உள்ளதாக கூறப்படும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது இந்நிலையில்,தற்போது இந்தப் படத்தின் எடிட்டிங் வேலைகள் முழுமையாக முடியவில்லை என்கிறார்கள். இதையடுத்து ‘லால் சலாம்’ படத்தை பொங்கல் ரேஸில் இருந்து தள்ளி வைத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
இந்நிலையில்,லால் சலாமுக்கு பதிலாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில்,அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் சாப்டர் 1 படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறது லைகா நிறுவனம். அருண் விஜய்யுடன் நிமிஷா சஜயன், எமி ஜாக்சன், அபி ஹசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் ‘லால் சலாம்’ வரும் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.