பகத் பாசிலுடன் மீண்டும் இணையும் வடிவேலு!

 கடந்த வருடம் ஜூன் மாதம்  மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ,’மாமன்னன்’. நல்ல வரவேற்பை பெற்றது.  இதில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், ஆழமான அரசியலும் பேசப்பட்டிருந்தது. உதயநிதி நாயகனாக நடித்து இருந்த இப்படத்தில், மாமன்னன் கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலுவும் ,  ரத்னவேலு என்கிற அரசியல் தலைவராக ஃபகத் பாசிலும் நடித்திருந்தனர்.

இவர்களின் கதாபாத்திரங்கள் தமிழக ரசிகர்கள் மத்தியில்  பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில்,இப்படத்தை தொடர்ந்து, வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் மீண்டும் ஒரு புதிய படத்துக்காக  இணைய உள்ளனர்.   இப்படத்தை  ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ பட நிறுவனம் சார்பில்  ஆர்.பி.சௌத்ரி  தனது 98-ஆவது படமாக தயாரிக்க உள்ளார். வி கிருஷ்ண மூர்த்தி கதை எழுத, இயக்குனர் சுதீஷ் ஷங்கர் என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார்.

இப்படம் தார் சாலையை அடிப்படையாக வைத்தோ… சாலை மார்க்கத்தை அடிப்படையாக கொண்டோ  உருவாகலாம் என்பதை தெரிவிக்கும் விதத்தில் இப்படத்தின் போஸ்டர் அமைந்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தின் கதைக்களம் மற்றும் மற்ற நடிகர் – நடிகைகள் பற்றிய விபரங்கள்  விரைவில் வெளியாகும் என தெரிகிறது.