வாங்க மன்மதராசானு கூப்பிட்டாரு கலைஞர் .. தனுஷ் நெகிழ்ச்சி! l
கலைஞர் கருணாநிதியின் 100 விழா சென்னையில் நடந்ததுஇவ்விழாவில் பங்கேற்ற நடிகர் தனுஷ் பேசுகையில்,”கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை. முதன் முதலில் ஒரு படத்தோட பூஜைக்காக பத்திரிகை வைக்க கலைஞர் வீட்டுக்குப் போயிருந்தேன். ‘வாங்க மன்மத ராசா’ன்னு கூப்பிட்டாரு. நம்ம பாட்ட இவர் கேட்டுருக்காரான்னு ஆச்சர்யமா இருந்துச்சு.அந்தப் பத்திரிகைல ரெண்டு கெட்டப் இருக்கும். ஒண்ணு கிராமத்து கெட்டப். இன்னொன்னு சிட்டி கெட்டப். அதை பார்த்துட்டு ரெட்டை வேஷமான்னு கேட்டாரு. ‘இல்ல சார்…’ னு சொன்னேன். ‘ஓ… அப்ப கிராமத்துல இருந்து கிளம்பி வந்து இப்படி ஆகுற’ன்னு படத்தோட ஒட்டுமொத்த கதையையும் சொல்லிட்டாரு. ஆமா சார் நீங்க சொன்னதுதான் கதைனு சொல்லிட்டு வந்தேன்.எப்போ எங்க என்னைப் பார்த்தாலும் கன்னத்தை வருடி எப்படி இருக்கன்னு கேட்பாரு. அவருக்கு ஹ்யூமர் சென்ஸ் அதிகம். அவர் ‘எந்திரன்’ படம் பார்க்கும் போது அவருக்கு பின்னாடி உட்கார்ந்து படம் பார்க்குற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. அவர் படத்தை ரசிக்கிறதை நான் பார்த்துட்டே இருந்தேன். ‘எந்திரன்’ல கெட்ட குணமுடைய சிட்டி வந்ததும் கை தட்டினார்.ஒரு சிலரோட மறைவு நமக்கு சின்க் ஆகாது, அது உண்மைன்னு தோணாது. அதே மாதிரிதான் கலைஞர் இறந்துட்டாருன்னு சொன்னதும் என் நினைவுக்கு வருது. இப்பவும் அவர் நம்மகூட இருக்கிற மாதிரியேதான் இருக்கு. கலியன் பூங்குன்றனார் சொல்லி இருக்கிறார் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றார். அதே போல கலைஞர் அவர்கள் நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும் என்று. அவர் சொன்ன கருணாநிதியின் வரிகள் படி நாமாக வாழ்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.