நடிகர் சிம்பு ‘பெரியப்பா’ ஆனார்!
நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி உஷா ராஜேந்தர் தம்பதியினரின் இளைய மகன் குறளரசன் . இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் தனது பெற்றோர் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்..
இதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நபீலா என்பவருடன் குறளரசனுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணமானதைத் தொடர்ந்து நபீலா கர்ப்பமானார். கடந்த சில தினங்களுக்கு முன் குறளரசன் மற்றும் நபீலா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
டி ராஜேந்தரின் மகளான இலக்கியாவுக்கு கடந்த சில வருடங்கள் முன்பு ஆண் குழந்தை பிறந்தது. தனது மகள் மூலமாக தாத்தாவாக ப்ரோமோட் ஆன டி ராஜேந்திரன் தற்போது இரண்டாவது முறையாக தாத்தவாகியுள்ளார். நடிகர் சிலம்பரசன் தற்போது பெரியப்பாவாக ஆகியுள்ளார்.