கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சிம்புவின் 48 வது படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். கடந்த சில மாதங்களாக இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது . இப்படத்திற்காக சிம்புவும் வெளிநாடு சென்று,மார்ஷியல் ஆர்ட் போன்ற கலைகள் மூலம் உடல் ரீதியாக தன்னை தயார் படுத்தி கொண்டுள்ளார். .
இப்படத்தில் சிம்பு,ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ,தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் பான் இந்தியபடமாக உருவாகும் இப்படத்தில் இந்திய திரை உலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிம்புவின் பிறந்த நாள் (பிப்ரவரி 3 ம் தேதி) நாளை கொண்டாட பட உள்ள நிலையில்,.தற்போது சிம்பு இரட்டை வேடங்களில் எதிரும் புதிருமாக இருக்கும் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் ஹீரோ சிம்புக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாராம். வில்லன் சிம்புக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பதாக கூறப்படுகிறது.