துல்கர் சல்மான் நடிப்பில் உருவான, ’லக்கி பாஸ்கர்’
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில்,வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம், ’லக்கி பாஸ்கர்’ .இதில் துல்கர் சல்மான் ஜோடியாக மீனாட்சி செளத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.இந்நிலையில் துல்கர் சல்மான் நடிகராக 12 ஆண்டுகள் திரைத்துறையில் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் துல்கர் சல்மான் ஒரு வங்கி காசாளராக நடித்துள்ளார்
.‘துல்கரின் நடிப்பு மற்றும் போஸ்டர் டிசைன் பார்வையாளர்கள் மத்தியில் சுவாரஸ்யமூட்டக் கூடியதாக அமைந்துள்ளது. இப்படம் 80களின் காலகட்டமான பாம்பே (தற்போதைய மும்பை) பின்னணியைக் கொண்டது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.. மேலும், ஒரு எளிய மனிதனின் ஒழுங்கற்ற லட்சியம், ஆபத்து மற்றும் சூழ்நிலையில் இருந்து தப்பித்தல் ஆகியவையும் இந்தக் கதையில் உள்ளது எனக் கூறியுள்ளனர். பம்பாயில் 80களின் நிதி நெருக்கடியான காலத்தில், ஒரு காசாளரின் வாழ்க்கை பெரும் கொந்தளிப்பில் செல்கிறது. இப்படத்தின்
படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் தெலுங்கு, மலையாளம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது.