இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022ம் ஆண்டு மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது.
ஆனால், திருமணமான உடனே மணமகன் ரோஹித் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் ரோஹித் மீது பல குற்றச்சாட்டுகளும் புகார்களும் உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இவ்விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சனை வெடித்த நிலையில் ஐஸ்வர்யா மற்றும் ரோஹித் தம்பதிகள் பிரிந்துவிட்டனர்.இதையடுத்து சட்டப்படி விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில் , ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதை உறுதிப்படுத்துவது போல், இந்த விஷயத்தை ஷங்கரின் இரண்டாவது மகள், நடிகை அதிதி ஷங்கர்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா மற்றும் மாப்பிள்ளை புகைப்படங்களைப் பகிர்ந்து, இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.
மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திருமணம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது .