சமூக பிரச்சனையே மையக் கருவாக கொண்டு உருவான ‘அக்கரன்’!
அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘அக்கரன்’. குன்றம் ப்ரொடக்ஷன் மற்றும் சிவானி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் எம் எஸ்.பாஸ்கருடன் ‘கபாலி’ விஸ்வாந்த்,வெண்பா, நமோ நாராயணன்,’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஆகாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.இப்படம் குறித்து இயக்குனர் அருண் கே பிரசாத் கூறுகையில்,” அக்கரன் திரைப்படம் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை மையக் கருவாக கொண்டு, ஜனரஞ்சகமான படமாக உருவாக்கப்பட்டுள்ளது.அக்கரன் என்றால் அழிக்கமுடியாதவன், எங்கும் நிறைந்தவன், கடவுள்…என படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற் போல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் எம்.எஸ் பாஸ்கர்.பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் இப்படத்தில் ஒரு சாதாரண விவசாயியாக எம் எஸ். பாஸ்கர் நடித்துள்ளார். அவருக்கு 2 மகள்களில் இளைய மகள் மருத்துவர் ஆகும் கனவில், பக்கத்து ஊருக்கு சென்று தனியார் கல்வி மய்யத்தில் நீட் தேர்வுக்கு படித்து வருகிறார்.
இந்நிலையில் சில அரசியல் பின்புலம் வாய்ந்தவர்களால் அவர் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு விடுகிறார். சட்டத்தின் பிடியில் இருந்தும் அவர்கள் சுலபமாக தப்பி விடுகிறார்கள். இந்நிலையில் மகளை இழந்து கதறி துடிக்கும் அந்த ஏழை வயதான விவசாயி அவர்களை எப்படி பழி தீர்க்கிறார் என்பது தான் இப்படத்தின் பரபரப்பான திரைக்கதை.எம்.எஸ் பாஸ்கர் தன் இரு மகள்களுக்கு ஹீரோவாகவும் கடவுளாகவும் தன் அரக்கத்தனமான நடிப்பால் அசத்தியுள்ளார்.என்கிறார்.இப்