தனுஷ் நடித்து இயக்கி வரும் ’ராயன்’ திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் பட்டியலில், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் ,துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி ,வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் அட்டகாசமான போஸ்டர்களை வரிசையாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் நடிகர் தனுஷ்,தற்போது மற்றுமொரு திருப்பமாக ‘பருத்தி வீரன்’ சரவணன் போஸ்டரை வெளியிட்டுள்ளார் சரவணன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது கெட்டப் மட்டும் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.