இரட்டைவேடத்தில் கலக்கும் ஹன்ஷிகா !
மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் கண்ணன் தயாரித்து, இயக்கியுள்ள புதிய படம், “காந்தாரி” இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மெட்ரோ ஷிரிஷ்,மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், ஸட்ண்ட் சில்வா, வினோதினி, பவன், பிரிகிடா சகா, வடிவேல் முருகன், கலைராணி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வருகிறது.
கமர்ஷியல் கலந்த ஹாரர் டிராமாவாக “காந்தாரி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.இந்து அறநிலையத்துறை அதிகாரியாக வேலை பார்க்கும் இளம்பெண், பல காலத்திற்கு முன் ஒரு மன்னன் கட்டிய கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்கிறார். பொக்கிஷங்களைத் தேடிச் செல்லும் அவருக்கு, அங்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. பல திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதையில், இப்படம் ரசிகர்களுக்குப் புத்தம் புது அனுபவமாகவும் இருக்கும்.
நடிகை ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் முதல் முறையாக இந்து அறநிலையத்துறை அதிகாரி, நரிக்குறவப் பெண் என இரட்டை வேடத்தில், நடிக்கிறார்.
இப்படத்திற்காகச் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ரூ.60 லட்சத்தில், ஒரு பிரம்மாண்டமான மலைக் குகை அமைத்து, 1943 கால கட்டத்தில் நடக்கும் பிளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்கியுள்ளது இப்படத்தின் கதையை தொல்காப்பியன் எழுத,திரைக்கதையை தனஞ்செயன் எழுதியுள்ளார். வசனங்களை ஸ்ரீனி எழுதியுள்ளார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் கவனிக்க, எல்வி .முத்து கணேஷ் இசையமைத்துள்ளார்,
இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்த ந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.