தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சத்யராஜ். தற்போது ஏராளமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் கமிட்டாகி நடித்து வ்ருகிற்றர். இவரது மகளான திவ்யா இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்களில் திவ்யா சத்யராஜும் ஒருவர். மகிழ்மதி என்ற தனியார் நிறுவனத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மேலும், அவ்வப்போது வெளிப்படையாக அரசியல் கருத்துக்களையும் பேசி வருகிறார்.இந்நிலையில் திவ்யாசத்யராஜ் பாஜகவில் இணைய போவதாகவும்,லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதாகவும், சமூக வலைத்தளங்களி ல் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து திவ்யா சத்யராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,”‘எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என ஏற்கெனவே தெரியப்படுத்தினேன். உடனே எல்லோரும், எம்.பி ஆக அரசியலுக்கு வருகிறீர்களா? மந்திரி ஆசை உண்டா? சத்யராஜ் சார் உங்களுக்கு பிரச்சாரம் செய்வாரா?’ எனப் பல கேள்விகள் வந்தன. நான் பதவிக்காகவோ, தேர்தலில் வெல்ல வேண்டும் என்றோ அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்காக வேலை செய்ய வேண்டும், களப்பணி செய்ய வேண்டும் என்ற ஆசையில் அரசியலுக்கு வர நினைக்கிறேன். களப்பணிகள் செய்தும் வருகிறேன்.
மகிழ்மதி என்ற இயக்கம் மூன்று வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்து அதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கி வருகிறேன். நான் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மை. மேலும், பிஜேபியில் இணைய விருப்பம் இல்லை என திவ்யா சத்யராஜ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.